Wednesday, 11 May 2016

ஏழ்மை மகன்

திறமைகளை தீயில் போட்டு 
கனவுகளை கிடப்பில் போட்டு 
வாங்கிய பட்டமாவது வாழ்க்கைத் தருமா 
என வாய்ப்பைத் தேடி அலைகிறேன். 
சென்ற இடமெல்லாம் பணம் கேட்டால் 
எங்கே செல்வேன் இந்த ஏழ்மை மகன்.

குப்பைத் தொட்டி

காமம் கண்ணை மறைக்கவே 

ஜோடியாக இரண்டும் திரியுதே 

கேட்டால் காதல் என்று சொல்லுதே 

இலவச இணைப்பாய் குழந்தை ஒன்று பிறக்கவே 

தொட்டிலிலே குப்பை தொட்டிலிலே உறங்குதே 

தொப்பில் கொடி அறுக்கப் பட்டு 

குழந்தை குப்பையிலே உறங்குதே

வறுமையின் தலைமகன்

தத்தித் தவழ்ந்திடும் 
வயதில் 
சிந்திச் சிதறுது 
வியர்வை...! 

நோக்கம் பகட்டுகள் இல்லை... 
சில சோற்றுப் பருக்கையே தேவை...! 

வாழ வழியேதும் இல்லை 
சிறுபார்வை ஒன்றே 
இரக்கத்தின் எல்லை...! 

இந்த வாழ்வில் இனிமைகள் இல்லை..! 
இவை வேண்டி விரும்பியதில்லை...! 

எந்தன் வேர்வை 
வழியிலே நாளை 
புது விடியல் பிறக்கும் நல் வேளை...!

உண்மைதான்

மௌனம் நிலவுகிறது - மனசு 
மட்டும் வலிக்கிறது 
இவ்வுலகில் 
பணம் வலிமையானதா ?.... 
குணம் வலிமையானதா ?.... 

என 
நீ கேட்டு 
அவற்றுக்கும் நீயே 
பதிலுரைத்தாய் 
இவ்வாறு..... 

எடைபோட்டுப் பார்த்தால் 
பணமே வலிமையானதாய் 
காட்சி அளிக்கிறது இவ்வுலகில் 
குணமோ தூக்கி எறியப்படுகிறது 
குப்பையில் என்றாய்.......... 

இதுவே நடைமுறை 
உலகமென அழகாய் 
எடுத்துரைத்தாய் எனதன்பே !.. 

அதுவே உண்மையென 
100 % உணர்ந்தேன் இன்று 
ஏழ்மை கொண்ட என்னிடத்தில் 
என்ன உள்ளதென - நீ 
தூற்றிச் சென்றதன் மூலம் !!.......... 

பசி

கண்களைக் கொத்தி திங்கத் தானே 

கழுகுகள் காத்து கிடக்குது 

பசியால் தள்ளாடும் அந்த குழந்தை எப்பொழுது வீழுமென

உலக அழிவு

இவ்வகிலத்தில் அணைவருமே மாண்டனர் 

இவ்வுலகின் கடைசி மனிதன் நீயும் நானும் மட்டுமே 

இன்னும் சிறிது நேரத்தில் 

நாமும் செத்து விடுவோம் 

சாகும் முன்னே 

கொஞ்சம் பால் கொடுத்து விட்டு செத்து விடு அம்மா

பாரதம்

கனியை புசிப்பவன் விதையிட மறக்கிறான் 

அடுக்கு மாடி குடியிருப்பில் கண் மூடி எச்சில் துப்புகிறான் 

பாரதத்தினுள்ளே நடக்கும் போரை எவரும் காண்பதில்லை 

சாதி கொடுமை 

அது இங்கே இல்லை 

பணத்தினால் பிரிக்கிறான்